உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 02, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மஹாராஜ்கஞ்ச், ஆக. 3–
உத்தர பிரதேசத்தில், குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலியாகினர்.
உ.பி.,யின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் சிஸ்வா நகராட்சிக்கு உட்பட்ட மீராபாய் நகரில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக ராஜ்பீர், 13, நிதிஷ், 12, ரோஹன், 13, கிருஷ்ணா ரவுனியார், 15, ஆகிய நான்கு சிறுவர்கள் நேற்று சென்றனர். அங்கு குளித்தபோது மூன்று சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர். ராஜ்பீர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். அவர் அளித்த தகவலின்படி மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு பின், மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
