சமூகவலைதளத்தில் பரவும் "டீப் பேக்" வீடியோ: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
சமூகவலைதளத்தில் பரவும் "டீப் பேக்" வீடியோ: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
UPDATED : மே 02, 2024 03:17 PM
ADDED : மே 02, 2024 01:31 PM

புதுடில்லி: சமூகவலைதளத்தில் டீப் பேக் எனப்படும் போலி வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஒருவரது ஆபாசமான வீடியோவில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் 'ஏஐ' எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், 'மார்பிங்' செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி, பிரபல இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசும் 'டீப் பேக்' வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சமூக வலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று(மே 02) விசாரணைக்கு வந்தது.
அப்போது மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் மேத்தா மனுதாரர் தரப்பில் ஆஜராகி, சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோ பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என வாதிட்டார்.
தொழில்நுட்பம்
இதையடுத்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ''தேர்தல் கமிஷனிடம் இது தொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. டீப் பேக் வீடியோக்களை யார் வேண்டுமானால் உருவாக்க முடியும்'' என தெரிவித்தனர்.
மறுப்பு
இதையடுத்து, சமூகவலைதளத்தில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

