"நான் ஜோதிடர் அல்ல": நிருபர்கள் கேள்விக்கு பிரியங்கா பதில்
"நான் ஜோதிடர் அல்ல": நிருபர்கள் கேள்விக்கு பிரியங்கா பதில்
ADDED : ஏப் 17, 2024 02:52 PM

லக்னோ: இண்டியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛‛ நான் ஜோதிடர் அல்ல. இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பதில் அளித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. இன்று ராம நவமி. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது?
விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்னைகளை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. இன்று ஒரு விவசாயி 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக தற்கொலை செய்து கொள்கிறார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால், பா.ஜ., 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
நான் ஜோதிடர் அல்ல
இண்டியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்காவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு,‛‛ நான் ஜோதிடர் அல்ல. இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்'' என பிரியங்கா பதில் அளித்தார்.

