உள்ளடக்கத்திற்கு செல்ல
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பலி
ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பலி
ADDED : ஜூலை 30, 2024 01:10 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் காயலான் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடைக்கு நேற்று வந்த லாரியில் இருந்து பொருட்கள் கொட்டப்பட்டன. அப்போது, அதில் இருந்து கீழே விழுந்த மர்மப் பொருள் திடீரென வெடித்தது.
அங்கு கடையில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களுக்கு அருகே நின்றிருந்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
