கோர விபத்து தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திராவில் பலி
கோர விபத்து தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திராவில் பலி
ADDED : மே 28, 2024 01:33 AM
மசிலிபட்டினம்,
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் கோவூரு பகுதியில் இருந்து ஐந்து பேருடன், தமிழகத்தை நோக்கி கார் ஒன்று நேற்று வேகமாக சென்றது.
பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
தகவலறிந்து வந்த போலீசார், காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர், விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.
இதில் சுவாமிநாதன், 40, அவரது மகள் ராதா பிரியா, 14, மகன்கள் ராகேஷ், 12, கோபி, 23, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது மனைவி சத்யா மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.