400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்
400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்
UPDATED : ஏப் 28, 2024 09:00 PM
ADDED : ஏப் 28, 2024 08:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ.,வின் 400 படம் பிளாப் ஆகி விட்டதால் மன உளைச்சலில் உள்ளனர் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த நாடும் இண்டியா கூட்டணி அரசு அமையும் என்ற மனநிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.,வினர் மன உளைச்சலில் உள்ளனர்.அவர்களின் 400 என்ற படம் பிளாப் ஆகி விட்டது. பிரதமர் பீகாருக்கு வருவார் போவார். ஆனால் மாநிலத்தில் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை, தேர்தல் முடிந்ததும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் பீகார் செல்ல மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

