ADDED : மே 16, 2024 06:08 AM
கொப்பாலில், : சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் கன்னட மீடியத்தில் படித்த மாணவர்கள் 48 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளது, பள்ளி கல்வி துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இம்முறையும் மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை 16வது இடத்தை பிடித்திருந்த கொப்பால் கல்வி மாவட்டம், இம்முறை 32வது இடத்தை பிடித்துள்ளது.
இதில், முக்கியமாக கன்னட மீடியம் பள்ளியில் படித்த 22 ஆயிரத்து 712 பேரில், 8,173 பேர் கன்னட மொழி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. கன்னட பள்ளியில் படித்து கன்னட மொழியில் 52 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 48 சதவீதம் மாணவர்கள் தோல்வியடைந்து உள்ளனர். இது பெற்றோர் மட்டுமின்றி, பள்ளி கல்வி துறை இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொப்பால் மட்டுமல்ல, கல்யாண கர்நாடகா பகுதி கல்வி மாவட்டங்களிலும் இதே நிலை ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்ட பள்ளி கல்வி துறை, தேர்வில் தோல்வி அடைந்த மாணவ - மாணவியருக்கு ஜூன் 7 ம் தேதி முதல் 14ம் தேதி வரை மறுதேர்வு நடத்துகிறது.
இதற்கான சிறப்பு வகுப்புகள் நேற்று துவங்கின.
***