பீன்யா - நாகசந்திரா வழித்தடத்தில் 5 நாள் மெட்ரோ ரயில் ரத்து
பீன்யா - நாகசந்திரா வழித்தடத்தில் 5 நாள் மெட்ரோ ரயில் ரத்து
ADDED : ஆக 19, 2024 10:56 PM
பெங்களூரு:
பசுமை வழித்தடத்தில் நாகசந்திரா - மாதவாரா இடையே சிக்னல் பரிசோதனை நடப்பதால், ஆக., 20, 23, 30, செப்., 6, 11ம் தேதிகளில் பீன்யா - நாகசந்திரா வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.
மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை:
பசுமை வழித்தடமான நாகசந்திரா - மாதவாரா வரையில் சிக்னல் பரிசோதனை நடக்க உள்ளது. எனவே, ஆக., 20, 23, 30, செப்., 6, 11ம் தேதிகளில் பீன்யா - நாகசந்திரா வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.
ஆக., 24ம் தேதி நாகசந்திராவில் இருந்து பீன்யா தொழில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு புறப்படும் கடைசி ரயில், இரவு 11:05 மணிக்கு பதிலாக, 10:00 மணிக்கே புறப்படும்.
அன்றைய தினம், பீன்யா தொழில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சில்க் இன்ஸ்டிடியூடுக்கு கடைசி ரயில், இரவு 11:12 மணிக்கு புறப்படும். ஆக., 25ம் தேதி பீன்யா தொழில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 6:00 மணிக்கு புறப்படும்.
அன்றைய தினம் பீன்யா தொழில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும்.
இளஞ்சிவப்பு மெட்ரோ ரயில் வழித்தடத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.