ஒரே நாளில் 50 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்; பீஹார் அரசு திடீர் அதிரடி
ஒரே நாளில் 50 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்; பீஹார் அரசு திடீர் அதிரடி
ADDED : செப் 08, 2024 10:16 AM

பாட்னா: பீஹாரில் ஒரே நாளில் 50 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றம்
பீஹாரில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 50 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்காகவே, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், போஜ்பூர் கலெக்டர் ராஜ்குமார், பீகார் மாநில பால் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஷோகெர் கலெக்டர் பங்கஜ் குமார் தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குனராக இருந்த நய்யார் இக்பால், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மாநில முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்துள்ளார்.
அதிர்ச்சி
ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.