ADDED : பிப் 25, 2025 03:31 AM

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியின் கோகாக் அருகே கமடகி கிராமத்தின், பாலசந்திர நாராயண் கவுடர், 50, பசவராஜ் சிவப்பா தொட்டமணி, 49.
விருபாக் ஷப்பா சென்னப்பா குமட்டி, 61, சுனில் பாலகிருஷ்ணா, 45, பசவராஜ் நிருபதப்பா குரலி, 63, சரணப்பா சிபரட்டி, 27, ஆகியோர், கோகாக்கில் இருந்து ஜீப்பில் பிரயாக்ராஜ் சென்றனர்.
கும்பமேளாவில் பங்கேற்று விட்டு, பெலகாவிக்கு திரும்பி வந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பெஹ்ரா டோல் நாகா என்ற இடத்தில், நேற்று அதிகாலையில் ஜீப் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினி பஸ்சும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
- நமது நிருபர் -

