போதைப்பொருள் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் சிக்கிய துணை நடிகர்
போதைப்பொருள் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் சிக்கிய துணை நடிகர்
ADDED : அக் 01, 2025 08:25 PM

புதுடில்லி: போதைப்பொருள் கடத்தி வந்து பிடிபட்டவர் பாலிவுட் துணை நடிகர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருக்கு நைஜீரியாவைச் சேர்ந்த கும்பலுடன் தொடர்பு குறித்து தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த துணை நடிகர் பிரம்மா(32) என்பவரிடம் சோதனை நடத்தினர். அதில், அவர் ரூ.40 கோடி மதிப்புள்ள மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் இருந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான ' ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2' படத்தில் நடித்துள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்ட அவர், அதற்காக விடுமுறையில் கம்போடியாவுக்கு செல்வதும், அங்கிருந்து திரும்பும்போது போதைபொருளை பையில் மறைத்து கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.