மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு!
மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு!
ADDED : அக் 01, 2025 08:59 PM

புதுடில்லி: மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை அரசியல் சட்டப்படி அமலில் இருக்கிறது. குறிப்பிட்ட சில வரி வருவாயை நியாயமான மற்றும் சமமான அளவில் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்கூட்டியே தவணை தொகையை விடுவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீஹாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,123 கோடியும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.