ஐந்து ஆண்டு பதவியை முழுமையாக நிறைவு செய்வேன்: உறுதியுடன் கூறுகிறார் கர்நாடக முதல்வர்
ஐந்து ஆண்டு பதவியை முழுமையாக நிறைவு செய்வேன்: உறுதியுடன் கூறுகிறார் கர்நாடக முதல்வர்
ADDED : அக் 01, 2025 08:32 PM

மைசூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியை 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று குனிகல் எம்.எல்.ஏ. எச்.டி. ரங்கநாத் உட்பட சில காங்கிரஸ் தலைவர்கள் இன்று கூறிவந்தனர். இந்த நிலையில் மைசூரில் அரசு தசரா கொண்டாட்டங்களின் போது முதல்வர் புஷ்பார்ச்சனை செய்யும் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சித்தராமையா மைசூரு வந்தார்.
அப்போது சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் ஐந்தாண்டு காலத்திற்கு முதல்வராக இருப்பேன். கட்சி தலைமை வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிவேன். கட்சித் தலைமை என்ன முடிவு செய்தாலும், நாம் அதன்படி நடக்க வேண்டும்.அடுத்த ஆண்டு மைசூரில் நடைபெறும் தசராவின் போது 'புஷ்பார்ச்சனை' செய்வேன் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சித்தராமயைா கூறினார்.