ADDED : ஆக 18, 2024 11:32 PM
கோலார்: கேம் விளையாட மொபைல் போன் தருவதாக கூறி, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸ் தேடுகிறது.
கோலாரின் முல்பாகல் முஸ்துாரு கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப், 21. இவரது வீட்டின் அருகே வசிக்கும் தம்பதிக்கு, 7 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுமியின் தந்தையை சந்திக்க சந்தீப் சென்றார்.
சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. தனியாக இருந்த சிறுமியிடம், சந்தீப் நைசாக பேச்சு கொடுத்தார்.
'என் மொபைலில் நிறைய கேம் உள்ளது. கேம் விளையாட மொபைல் போன் தருகிறேன்' என்றார். பின், சிறுமியை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார். வலியால் துடித்த சிறுமியை, தாய் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
சிறுமி பெற்றோர் அளித்த புகாரில், சந்தீப் மீது போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை, போலீஸ் தேடுகிறது.

