ADDED : செப் 05, 2024 09:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் இரு பைக்குகள் மீது கார் மோதி 6 பேர் உயிரிழந்தனர். அதேபோல, உத்தர பிரதேசத்தில், இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் பலியாகினர்.
ஸ்ரீகங்காநகர் மாவட்டம் சூரத்கர் - -அனுப்கர் நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு, இரு பைக்குகள் மீது எதிரில் வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் தாராசந்த்,20, மணீஷ்,24, சுனில் குமார்,20, ராகுல்,20, சுபகரன்,19, பல்ராம்,20 ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பிஜார் நகர் போலீசார், தப்பி ஓடிய கார் டிரைவரை தேடுகின்றனர்.
உ.பி., விபத்து
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் தனபவன் தெருவில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அருண்,24, சுபம்,19, ஆகிய இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.