ஓட்டுனர்களுக்கு 9 மணி நேரம் ஓய்வு கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் உத்தரவு
ஓட்டுனர்களுக்கு 9 மணி நேரம் ஓய்வு கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகள் உத்தரவு
ADDED : ஏப் 04, 2024 10:34 PM
பெங்களூரு - 'தொலை துார வழித்தடங்களுக்கு ஓட்டுனர்களை பணிக்கு அனுப்புவதற்கு முன், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் ஓய்வளிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., உயர் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு:
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களால் விபத்துகள் நடப்பது அதிகரிக்கிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது. பஸ் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் பணி அழுத்தமே, விபத்துகளுக்கு காரணம் என்பதை உணர்ந்துள்ளோம். எனவே ஓட்டுனர்களுக்கு ஓய்வு அளிப்பது அவசியம்.
விபத்துகளுக்கான காரணங்கள், இவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. ஓட்டுனர்களை ஓய்வின்றி பணிக்கு நியமிப்பதால், அவர்கள் சோர்வடைகின்றனர். இது அசம்பாவிதங்களுக்கு காரணமாவதாக, அறிக்கை வந்துள்ளது.
எனவே இரவு ஷிப்ட் பணிக்கும், தொலை துார வழித்தடங்களுக்கு ஓட்டுனர்களை அனுப்புவதற்கு முன்பும், குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம், அவர்களுக்கு ஓய்வளிக்க அனைத்து மண்டல கட்டுப்பாட்டு அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

