ADDED : மே 06, 2024 03:29 AM
சிக்கமகளூரு: காட்டு யானை தாக்கியதில், காபி தோட்ட தொழிலாளி பலியானார்.
சிக்கமகளூரு ஆல்துார் கஞ்சிநாகல்துர்கா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 55. நுார் அகமது என்பவருக்கு சொந்தமான, காபி தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்தார்.
நேற்று காலை வேலையில் ஈடுபட்டார். வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை, காபி தோட்டத்திற்குள்நுழைந்தது.
யானையை பார்த்ததும் ஆனந்த் ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை யானை துரத்தியது. நிலை தடுமாறி கீழே விழுந்தார். தும்பிக்கையால் தாக்கியும், காலால் மிதித்தும் ஆனந்தை, யானை கொன்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
சிறிது நேரம் கழித்து அங்கு சென்ற சக தொழிலாளர்கள், ஆனந்த் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினரும் அங்கு வந்தனர். அரசிடம் பேசி கூடிய விரைவில், ஆனந்த் குடும்பத்திற்கு நிவாரணம் வாங்கி தருவதாக, உறுதி அளித்தனர்.