'குடி' போதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15,000 அபராதம்
'குடி' போதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15,000 அபராதம்
ADDED : ஜூன் 30, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா: மதுபானம் குடித்து விட்டு, வாகனம் ஓட்டியவருக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், ஆகும்பே போலீஸ் நிலைய எல்லையில், சமீபத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக, காரில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அவர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது.
காரை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அவர் பெயர் பிரசன்னா ஷெட்டி, 32, என்பதும், உடுப்பியின், கடபாடியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.