ADDED : ஏப் 27, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: வெயில் காலத்திலும் குளிர்ந்த காலம் போன்று காணப்பட்ட பெங்களூரு, நகரமயமாக்கல் காரணமாக, வெப்ப காற்று வீச துவங்கி உள்ளது. இதனால் பகலில் வெளியே நடமாட முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதில் விலங்குகளுக்கும் விதிவிலக்கு இல்லை.
பெங்களூரை சேர்ந்த அக் ஷத் தக் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
வீட்டின் சமையல் அறையின் ஜன்னல் வழியாக இரண்டு குரங்குகள் நுழைகின்றன. ஒரு குரங்கு ஜன்னலில் அமர்ந்து கொண்டுள்ளது. மற்றொரு குரங்கு சுத்தமாக குடிநீர் வரும் குழாயில் வாய் வைத்து தண்ணீர் குடிக்கிறது. பின், அங்கிருந்து சென்று விடுகிறது. 42 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

