ADDED : ஆக 07, 2024 06:04 AM

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, நேற்று பெங்களூரு விகாஸ் சவுதாவில் அளித்த பேட்டி:
சித்தராமையா முதல்வராக இருந்த போது, மூடாவில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கவர்னர் தாவர்சந்த் கெலாட், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என மக்கள் பேசி வருகின்றனர்.
கவர்னர், மத்திய அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பில், செல்வாக்கு மிக்க சித்தராமையாவின் செல்வாக்கை குறைக்க சதி நடக்கிறது.
பாதயாத்திரை நடத்த பா.ஜ.,வுக்கு உரிமையில்லை. பசனகவுடா பாட்டீல் எத்னாலே, 'பாதயாத்திரை நடத்துவோர், நுாறு மடங்கு சட்ட விரோதமாக செயல்பட்டு உள்ளனர்' என கூறியுள்ளார்.
பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, என்ன செய்தது என்பது எங்களுக்கு தெரியும். ஒருவரை சுட்டிக்காட்டும் போது, மற்ற விரல்கள் நம்மை காட்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. பா.ஜ.,வின் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியது.
துணை முதல்வர் சிவகுமாரும், மத்திய அமைச்சர் குமாரசாமியும் ஒருவரை ஒருவர், தங்கள் சொத்துகள் குறித்து பேசிக் கொள்வதற்கு, என்னால் பதிலளிக்க முடியாது.
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால், எனது பெயர் இடம் பெறுவது முதல்வர், துணை முதல்வர் கையில் உள்ளது. கட்சியின் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.