ADDED : ஏப் 27, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசனின் குளகளலே கிராமத்தில், அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் நேற்று காலையில் இருந்தே, சுறுசுறுப்பாக ஓட்டு பதிவு நடந்தது. ஓட்டு போடுவதற்காக, ஜானவி, 94, பாத்திமா, 94, வந்திருந்தனர். இவர்கள் நேருக்கு நேர் பார்த்து கொண்ட போது, ஒரு காலத்தில் இணை பிரியா தோழிகள் என்பது தெரிந்தது.
ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள், இளம் பெண்களாக இருந்த போது, நெருக்கமான தோழிகளாக பழகினர். திருமணமான பின் இவர்கள் சந்திக்கவே இல்லை. பல ஆண்டுகளுக்கு பின், ஓட்டுச்சாவடியில் நேற்று சந்தித்தனர். மகிழ்ச்சியால் ஓருவரும் கட்டித்தழுவி, பால்ய காலத்து சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.

