தண்டவாளத்தில் சரிந்த மண் தடம் புரண்ட ரயில் இன்ஜின்
தண்டவாளத்தில் சரிந்த மண் தடம் புரண்ட ரயில் இன்ஜின்
ADDED : ஜூலை 27, 2024 11:16 PM

ஹாசன்: தண்டவாளத்தில் திடீரென சரிந்த மண்ணால், சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது.
மைசூரில் இருந்து மங்களூருக்கு நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, சரக்கு ரயில் புறப்பட்டது.
ஹாசன் - சாந்திகிராமம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், ரயில் மெதுவாக சென்றது.
அப்பகுதியில் பெய்த மழையால், மண் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் பைலட், லோகோ பைலட் அவசர பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாக, இன்ஜின் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.
இதுகுறித்து ஹாசன் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு மீட்பு வாகனத்தில் வந்த ரயில்வே ஊழியர்கள், டிராக்மேன்கள் இணைந்து தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றினர்.
பின் மீட்பு வாகனம் மூலம், தண்டவாளத்தில் இறங்கிய இன்ஜின் துாக்கி நிறுத்தப்பட்டது. அதன்பின், ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
மண் சரிந்த இடத்தில் மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, தென்மேற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.