ADDED : ஏப் 10, 2024 05:35 AM

ஹாவேரி : காங்கிரஸ் அரசின் கிரஹலட்சுமி திட்டத்தில் கிடைத்த பணத்தில், கன்னட புத்தாண்டு பிறப்பான நேற்று புதிய பிரிட்ஜ் வாங்கிய பெண், அதற்கு திலகமிடும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கடந்தாண்டு கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
அதில், மாதந்தோறும் பெண்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஹாவேரி மாவட்டம், ஷங்காவி நகரை சேர்ந்தவர் லதா. கிரஹலட்சுமி திட்டத்துக்காக, தன் பெயரை பதிவு செய்து, மாதந்தோறும் 2,000 ரூபாய் வாங்கி வந்தார்.
இதில் 17,500 ரூபாய் சேமித்த அவர், நேற்று கடைக்குச் சென்று, பிரிட்ஜ் வாங்கினார். வீட்டுக்கு வந்ததும், பிரிட்ஜுக்கு திலகம் இட்டு, தீபாராதனை காண்பித்தார்.
கிரஹலட்சுமி திட்டத்தால் எந்த பலனும் இல்லை என கூறி வந்தவர்கள் மத்தியில், இத்திட்டத்தால் வாங்கிய பிரிட்ஜுக்கு பூஜை செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

