ADDED : ஜூன் 19, 2024 04:41 AM
தாவணகெரே, : பல ஆண்டுகளாக தேடியும் மணமகள் அமையாததால், வேதனை அடைந்த இளம் விவசாயி, பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலியின் ஹிரேபசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா. இவர்களுக்கு பவன், 30, உட்பட இரு மகன்கள் உள்ளனர். இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.
வீட்டின் மூத்த மகனான பவனுக்கு, பெண் பார்த்து வந்தனர். ஆனால், யாரும் பெண் கொடுக்க தயாராக இல்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே பவன், மனமுடைந்து காணப்பட்டார்.
ஜூன் 16ம் தேதி வழக்கம்போல், வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது, வயலுக்கு அடிக்கும் பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
வெளியே சென்றவர்கள், மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பவன், மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை உடனடியாக ஷிவமொகா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்.
ஹொன்னாளி போலீசார் விசாரிக்கின்றனர்.

