அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஆதார் அடிப்படையில் பணி
அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஆதார் அடிப்படையில் பணி
ADDED : ஆக 07, 2024 10:23 PM
விக்ரம் நகர்:விபத்துகளை தவிர்க்க அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பணி ஒதுக்கீட்டை அமல்படுத்த டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நேற்று கூறியதாவது:
பயணியர், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. சமீபத்தில் நேர்ந்த தொடர் விபத்துகள் குறித்து ஆய்வு செய்த பின் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த முடிவு செய்தோம்.
அதன்படி, பேருந்து ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து இரண்டு ஷிப்ட் வேலை வழங்குவது தடுக்கப்படும். இதற்காக ஓட்டுனர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பணி ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதை உறுதி செய்ய பயோமெட்ரிக் சாதனம் நிறுவப்படும்.
மது போதையில் பேருந்து ஓட்டுவதைத் தடுக்க, அனைத்து பணிமனைகளிலும் சுவாச பரிசோதனைக் கருவி கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.