ADDED : செப் 06, 2024 07:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திர பால் கவுதம் இன்று அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சீமாபுரி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜேந்திர பால் கவுதம், இதற்கு முன் அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் இன்று அக்கட்சியிலிருந்து விலகினார். டில்லியில் காங்., தலைமையகம் சென்று பொதுச்செயலர் கே.சி. வேணுகோபாலை சந்தித்து அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.