ADDED : மே 23, 2024 10:16 PM

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வெளியேறியதால், மலையாள நடிகை ஹனி ரோஸ் வருத்தம் அடைந்து உள்ளார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த, வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றதால், பெங்களூரு அணி வெளியேறியது.
விராட் கோலிக்காக ஐ.பி.எல்., கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மலையாள நடிகை ஹனி ரோசும், பெங்களூரு அணி வெளியேறியதால், வருத்தத்தை வெளியிட்டு உள்ளார்.
அவர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் இதயம் நொறுங்கியது போன்ற 'எமோஜி' வெளியிட்டு உள்ளார். பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 'பிகினி' உடை அணிந்த புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக, ஹனி ரோஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.