sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அம்பானியை முந்திய அதானி; வாராவாரம் உருவாகும் புது கோடீஸ்வரர்கள்...: வெளியானது இந்திய பணக்காரர்கள் பட்டியல்

/

அம்பானியை முந்திய அதானி; வாராவாரம் உருவாகும் புது கோடீஸ்வரர்கள்...: வெளியானது இந்திய பணக்காரர்கள் பட்டியல்

அம்பானியை முந்திய அதானி; வாராவாரம் உருவாகும் புது கோடீஸ்வரர்கள்...: வெளியானது இந்திய பணக்காரர்கள் பட்டியல்

அம்பானியை முந்திய அதானி; வாராவாரம் உருவாகும் புது கோடீஸ்வரர்கள்...: வெளியானது இந்திய பணக்காரர்கள் பட்டியல்

6


UPDATED : ஆக 29, 2024 03:01 PM

ADDED : ஆக 29, 2024 01:36 PM

Google News

UPDATED : ஆக 29, 2024 03:01 PM ADDED : ஆக 29, 2024 01:36 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

5 நாளுக்கு ஒரு கோடீஸ்வரர்


ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாகி வருவதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும், கூடுதலாக 220 பேர் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட்


குறிப்பாக, 1,334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதில், 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ரியல் எஸ்டேட், தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் துறைகளின் வளர்ச்சியாகும்.

100 கோடிக்கு மேல்


அதேவேளையில், 205 பேரின் சொத்துக்கள் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், 45 பேர் இந்தப் பட்டியலில் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 354 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அறிக்கையில் சொல்லப்படுகிறது. அதிலும், 21 வயதுடைய இளம் தொழிலதிபரும் இந்தப் பட்டியலில் இருப்பது தான் குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

முதலிடம்


இந்த நிலையில், இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி தொழிலதிபரான அம்பானியை பின்னுக்குத் தள்ளி, தொழிலதிபர் அதானி முதலிடம் பிடித்துள்ளார். 3வது இடத்தில் எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உள்ளார்.

டாப் 10 இந்திய பணக்காரர்களின் முழு விபரம்


1.கவுதம் அதானி - 11.61 லட்சம் கோடி

2.முகேஷ் அம்பானி - 10.14 லட்சம் கோடி

3.ஷிவ் நாடார் -3.14 லட்சம் கோடி

4.சைரஸ் பூனாவாலா - 2.89 லட்சம் கோடி

5.திலிப் சங்வி - 2.49 லட்சம் கோடி

6.குமார்மங்கலம் பிர்லா - 2.35 லட்சம் கோடி

7.கோபிசந்த் ஹிந்துஜா - 1.92 லட்சம் கோடி

8.ராதாகிஷன் தமானி - 1.90 லட்சம் கோடி

9.அஸீம் பிரேம்ஜி - 1.90 லட்சம் கோடி

10.நீரஜ் பஜாஜ் - 1.62 லட்சம் கோடி






      Dinamalar
      Follow us