ADDED : மே 10, 2024 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. இவர், இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் கருப்பினத்தவரை போலவும் உள்ளதாக கூறினார்.
அவரது பேச்சு, நிறவெறியை துாண்டுவதாக சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, காங்., வெளிநாட்டு பிரிவு தலைவர் பதவியை பிட்ரோடா ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், மேற்கு வங்க காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் நேற்று கூறியதாவது:
இங்கு, ஆஸ்திரேலிய, கருப்பின, மங்கோலிய சாயலில் மக்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலர் கருப்பாகவும், சிலர் சிவப்பாகவும் உள்ளனர்.
நம் பள்ளிகளில் அது தான் கற்பிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட கருத்து குறித்து இதற்கு மேல் கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.