ADDED : ஏப் 06, 2024 11:04 PM
பெலகாவி: லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சோதனைச்சாவடி ஊழியர்களின் வசதிக்காக, 'ஏர் கூலர்' பொருத்தப்பட்டுள்ளன.
பெங்களூரு, கலபுரகி, பெலகாவி, விஜயபுரா, பல்லாரி உட்பட, பல மாவட்டங்களில் வெப்பத்தின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மக்கள் தத்தளிக்கின்றனர். வெயில் கொடுமையால் லோக்சபா தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் திண்டாடுகின்றனர்.
குறிப்பாக பெலகாவியில், காலை 8:00 மணிக்கே வெயில் கொளுத்துகிறது. மதிய நேரத்தில் தீயாய் சுட்டெரிக்கிறது. சோதனைச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், போலீஸ் ஏட்டுகள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் திணறுகின்றனர். சாலையில் நின்றபடி பணியாற்றுவதால் சோர்வடைகின்றனர்.
இவர்களின் வசதிக்காக, சோதனைச்சாவடிகளில் 'ஏர் கூலர்' வசதியை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. குடிநீர் கேன்கள் வைக்கப்பட்டுள்ளன. பெலகாவியின் 66 சோதனைச்சாவடிகளில் ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட ஏர்கூலர்களை, பெலகாவி மாவட்ட கலெக்டர் நிதீஷ், நகர போலீஸ் கமிஷ்னர் யடா மார்ட்டின், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஏர்கூலர்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து, ஊழியர்கள், போலீஸ் ஏட்டுகளிடம் தகவல் கேட்டறிந்தனர்.

