ADDED : ஏப் 19, 2024 12:31 AM

புதுடில்லி:வக்ப் வாரியம் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் அமலாக்கத்துறை முன் ஆஜரானார்.
டில்லி வக்ப் வாரியத்தின் தலைவராக டில்லி ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான், 50, இருந்த 2018 முதல் 2022 காலகட்டத்தில் நடைபெற்ற நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல சம்மன்களை அனுப்பியும் அமானதுல்லா கான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அமானதுல்லா கான் கூறுகையில், “நான் வக்ப் வாரியத்தின் தலைவராக இருந்தபோது, விதிகள் முறையாக பின்பற்றப்பட்டது. 2013ம் ஆண்டு வந்த புதிய சட்டத்தின்படி சட்ட ஆலோசனையின்படி அனைத்தையும் செய்ததேன்,” என கூறினார்.

