அம்மாடியோவ்: 5 வருசம், 300 கோடி ரூபாய், 5 ஆயிரம் விசா: 20 நிமிஷங்களில் விசா ஸ்டிக்கர் ரெடி, எங்கே தெரியுமா?
அம்மாடியோவ்: 5 வருசம், 300 கோடி ரூபாய், 5 ஆயிரம் விசா: 20 நிமிஷங்களில் விசா ஸ்டிக்கர் ரெடி, எங்கே தெரியுமா?
UPDATED : செப் 15, 2024 06:55 PM
ADDED : செப் 15, 2024 06:51 PM

புதுடில்லி: 20 நிமிடங்களில் விசா ஸ்டிக்கரை ரெடி செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 30 முதல் 60 வரை போலி விசாக்கள் தயாரித்து வந்த கும்பலை டில்லி போலீசார் தட்டி தூக்கி உள்ளனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சந்தீப் என்பவர் இத்தாலி செல்வதற்காக போலி சுவீடிஸ் விசா வைத்திருப்பதை டில்லி போலீசார் கண்டறிந்தனர். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடை கிராம மக்கள் இந்த முறையின் மூலம் வெளி நாடுகளுக்கு சென்று வருவதாக தெரிவித்தார்.
இதனை ஆசிப் அலி என்பவரிடம் பெற்றதாக கூறினார். இதனையடுத்து போலி விசா தயாரித்து தரும் ஆசிப் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சிவ கவுதம், பல்பீர் சிங், ஜஸ்விந்தர் சிங், ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக போலி விசா டில்லி திலக்நகரில் மனோஜ் மோங்கா என்பவர் இயக்கி வந்தது தெரியவந்தது.
அவரையும் கைது செய்த போலீசார் விசா தயாரிப்புக்கான கிராபிக் டிசைன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு மாதமும் 30 முதல் 60 விசாக்கள் வரை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் 20 நிமிடங்களில் விசா ஸ்டிக்கர் தயாரிக்கப்பட்டு விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு விசாவும் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
வெளிநாடு செல்ல காத்திருக்கும் மக்களை சிக்னல் டெலிகிராம், வாட்ஸ்ஆப் போன்ற வற்றின் மூலம் தொடர்பு கொண்டு சம்பாதித்து வந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டில்லி விமானநிலைய அதிகாரி உஷா ரங்ராணி கூறுகையில் இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 16 நேபாளி பாஸ்போர்ட், இரண்டு இந்திய பாஸ்போர்ட் ,30 விசா ஸ்டிக்கர், மற்றும் 23 விசா ஸ்டாம்புகள், தொடர்ந்து பிரிண்டர்கள், சாய இயந்திரங்கள், லேமினேஷன் ஷீட், யுவிமெஷின், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.