ஆந்திரா வெள்ள பாதிப்பு: சிறப்பு நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு நாயுடு
ஆந்திரா வெள்ள பாதிப்பு: சிறப்பு நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு நாயுடு
ADDED : செப் 18, 2024 03:38 PM

விஜயவாடா: ஆந்திராவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இது குறித்து தலைமை செயலகத்தில் அவர் கூறியதாவது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள தரை தள பகுதி வீடுகளுக்கு,தலா ரூ.25 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைதள மற்றும் முதல் மாடி வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். மற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட சிறுகடைகளுக்கு,தலா ரூ.25 ஆயிரமும், ரூ.40 லட்சம் வரவு-செலவு உள்ள பதிவுபெற்ற கடைகளுக்கு ரூ.50 ஆயிரமும், ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.1.5 கோடி வரவு-செலவுள்ள வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும்,ரூ.1.5 கோடி வரவு-செலவுள்ள வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,50,000 வழங்கப்படும்.
மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இழப்பீடு ரூ.9 ஆயிரமும், முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.20 ஆயிரமும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.6 ஆயிரமும், கால்நடைகள் இழப்பிற்கு ரூ.50 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.