தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
UPDATED : நவ 20, 2025 03:01 PM
ADDED : நவ 20, 2025 01:22 PM

சென்னை: கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (நவ., 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு, வடமேற்கில் மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடலில், நாளை மறுநாள், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதுவும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ., 21) கனமழை பெ ய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* ராமநாதபுரம்
* விருதுநகர்
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நாளை மறுநாள் (நவ., 22) கனமழை பெ ய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நவம்பர் 23ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

