sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உடுப்பியின் கார்கலாவை நினைவுகூர்ந்த அண்ணாமலை

/

உடுப்பியின் கார்கலாவை நினைவுகூர்ந்த அண்ணாமலை

உடுப்பியின் கார்கலாவை நினைவுகூர்ந்த அண்ணாமலை

உடுப்பியின் கார்கலாவை நினைவுகூர்ந்த அண்ணாமலை

7


ADDED : பிப் 23, 2025 07:04 AM

Google News

ADDED : பிப் 23, 2025 07:04 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி மாவட்டம் கார்கலாவை நினைவு கூர்ந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், 'உங்களை நேசித்த எங்களை ஏன் விட்டு சென்றீர்கள்' என மாநில மக்கள், 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

'கர்நாடகாவின் சிங்கம்' என்று அழைக்கப்பட்டவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த அண்ணாமலை. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.எஸ்., பதவியை ராஜினாமா செய்த பின், தமிழகத்துக்கு சென்று விவசாயம் செய்து கொண்டிருந்தார்.

பின், பா.ஜ.,வில் இணைந்து மாநில துணைத்தலைவராக பதவி வகித்தார். அப்போது தலைவராக இருந்து முருகன், மத்திய அமைச்சர் ஆன பின், அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் நியமிக்கப்பட்டது முதல், ஆளும் கட்சியினருக்கு 'சிம்ம சொப்பனமாக' இருந்து வருகிறார். தமிழக எதிர்க்கட்சி பா.ஜ., அல்லது அ.தி.மு.க.,வா என்று கேள்வி எழுப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

பாக்கியம்


இந்நிலையில், ஏ.என்.ஐ., என்ற செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் தான் பணியாற்றியது குறித்து விளக்கினார்.

அவர் கூறியதாவது:

நான் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பயிற்சி முடித்த பின், எனக்கு முதல் போஸ்டிங், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கார்கலாவில் கிடைத்தது. சிறிய நகரமான அங்கு, நான் சென்றதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அங்குள்ள மக்கள், தாராள மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் குணாதிசயங்கள் மிக சிறந்தது.

அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்; பண்பட்டவர்கள். இவை அனைத்தும் என்னை ஒரு மனிதனாக வடிவமைத்தன. ஆரம்பத்தில் கார்கலாவின் ஏ.எஸ்.பி.,யாக ஓராண்டு, எட்டு மாதங்கள் பணியாற்றினேன்.

அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, மாவட்டத்தின் வரலாற்றில் முதன் முறையாக, அம்மக்கள், என்னை அங்கேயே எஸ்.பி.,யாக வைத்திருக்க முயன்றனர்.

நான் மீண்டும் எஸ்.பி.,யாக பதவியேற்று, இரண்டரை ஆண்டுகள் அங்கேயே இருந்தேன். இதன் மூலம் கார்கலா, உடுப்பியில் என மொத்தம் நான்கு ஆண்டுகள் பணியாற்றினேன்.

அங்குள்ள மக்கள் ஏழைகள். அவர்களில் ஒருவனாக என்னை அவர்கள் நினைத்ததால், சிலர் நில தகராறு இருக்கிறது; தீர்த்து வையுங்கள் என்று என்னிடம் வருவர். கடற்கரை பகுதி மக்கள், மிகவும் மதப்பற்று மிக்கவர்கள். நான் கடவுள் மீது பயம் உள்ளவன்.

மதம்


மதத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். 'காந்தாரா' மூலம், கடற்கரை மக்களின் வழிபாடு, உலகளவில் பிரபலமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு உடுப்பி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்கள் அனைவரும் பதில் அளித்துள்ளனர்.

இணையவாசி ஒருவர், 'நானும் கார்கலாவை சேர்ந்தவன் தான். நீங்கள் அங்கு இருந்தபோது, நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். நீங்கள் எங்கு பேசினாலும், நான் அதில் கலந்து கொண்டிருப்பேன்' என்று கூறியுள்ளார்.

மற்றொரு இணையவாசி, 'உங்களை இவ்வளவு நேசித்த கர்நாடக மக்களை ஏன் வீட்டு சென்றீர்கள். கார்கலாவில் நீங்கள் இருந்த போது, குற்றச்சம்பவம் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அப்படி அல்ல' என்றார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us