ADDED : ஆக 03, 2024 11:28 PM

மைசூரு: ''முதல்வர் சித்தராமையா பலவீனமாக இல்லை. குண்டுக்கல் போன்று இருக்கிறார்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.
மைசூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., - ம.ஜ.த.,வினர், 'மைசூரு சலோ' பாதயாத்திரை நடத்துகின்றனர். இவர்களின் பாதயாத்திரையால், முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் அதிர்ச்சி அடையவில்லை.
முதல்வர் குண்டுக்கல் போன்று, உறுதியாக இருக்கிறார். முன்பு எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படியே இருக்கிறார்.
கர்நாடகாவில் கன மழை பெய்கிறது. வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்கள் பரிதவிக்கின்றனர். அறிவுள்ளோர் மக்களின் கஷ்டத்தில் பங்கேற்க வேண்டும்.
அதை விடுத்து விட்டு, எதிர்க்கட்சியினர் தேவையின்றி குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்களை பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என, கூற வேண்டுமா?
இவ்வாறு அவர் கூறினார்.