தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்


ADDED : ஆக 30, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், அமைதி திரும்பி வந்த நிலையில், கடந்த 26ம் தேதி இம்பால் மேற்கு மாவட்டத்தின் லேய்கிந்தாபி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இருந்து, மர்மநபர்கள் சிலர் மூன்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பறித்து சென்றனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக நான்கு போலீசார் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

காக்சிங் மாவட்டத்தின் வாபாகாய் நடேகோங் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொரு தேடுதல் வேட்டையில் ஐந்து துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகள், புல்லட் புருப் ஜாக்கெட்கள், ஒயர்லெஸ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us