சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து தமிழக வீரர் உட்பட 4 பேர் பலி
சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து தமிழக வீரர் உட்பட 4 பேர் பலி
ADDED : செப் 06, 2024 01:55 AM
காங்டக்,
சிக்கிமில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் சென்ற தமிழக வீரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பினாகுரி பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நான்கு பேர், நேற்று சிக்கிமின் ஜுலுக் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
பாக்யாங் பகுதியில் ரெனோக் - ரோங்க்லி நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென அந்த வாகனம் கவிழ்ந்து, 700 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்.
விபத்தில் பலியானவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் பாட்டீல், மணிப்பூரின் இம்பாலை சேர்ந்த பீட்டர், ஹரியானாவை சேர்ந்த குர்சேவ் சிங் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தங்கபாண்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டு ராணுவத்திடம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.