தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பஹல்காம் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி ஹபீசுக்கு பிடிவாரன்ட்

பஹல்காம் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி ஹபீசுக்கு பிடிவாரன்ட்

பஹல்காம் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி ஹபீசுக்கு பிடிவாரன்ட்


ADDED : ஜூலை 14, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் – இ – தொய்பாவின் பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர் ஹபீஸ் சயீத் மீது என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த 8ம் தேதி என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதில், இந்தியா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், 76, பெயர் சேர்க்கப்பட்டது. இவர், 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர். தடை செய்யப்பட்ட லஷ்கர் – இ – தொய்பா மற்றும் அதன் துணை அமைப்பான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ ஆகியவற்றின் தலைவராகவும் ஹபீஸ் சயீத் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை என்.ஐ.ஏ., நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us