ADDED : ஜூலை 14, 2026 07:32 PM
மாதாந்திர பொருளாதார அறிக்கை! நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க, ‘மாதாந்திர பொருளாதார அறிக்கை’ அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வருவாய், துறை சார்ந்த செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்படும். சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி
நடவடிக்கை எடுக்கப்படும்! அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களை அதிகாரிகள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாம்ராட் சவுத்ரி பீஹார் முதல்வர், பா.ஜ.,
புறக்கணிக்க வேண்டும்! மதம், நன்கொடைகளின் பெயரால் ஊழலை நிறுவனமயமாக்கி, பக்தர்களை பா.ஜ., ஏமாற்றி வருகிறது. அக்கட்சியின் இந்த குற்றங்களை உண்மையான தேச பக்தர்கள் அம்பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, சமூக மற்றும் அரசியல் ரீதியாக அக்கட்சியை புறக்கணிக்க வேண்டும். வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
