ADDED : மே 17, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கோட்லா முபாரக்பூர் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று நேற்று முன் தினம் இரவு மோதிவிட்டது.
இதனால் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள், காரை ஓட்டி வந்த வாலிபரையும் அவரது சகோதரியையும் வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக அடிக்கத் துவங்கினர். காரையும் அடித்து நொறுக்கினர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. சிறிய விபத்து என்றபோதிலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்காமல் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட நால்வரையும் அடையாளம் காண போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

