உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு: இந்தியா கூட்டணி நிராகரிப்பு
உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு: இந்தியா கூட்டணி நிராகரிப்பு
ADDED : ஜூன் 23, 2024 09:36 PM

புதுடில்லி: லோக்பாவில் உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பை இந்தியா கூட்டணி நிராகரிப்பதாக பார்லி விவகாரத்துறைக்கு இந்தியா கூட்டணிக்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: நடந்துமுடிந்த பொது தேர்தலுக்கு பின்னர் லோக்சபாவின் முதல் கூட்டம் நாளை (24.06.2024) துவங்குகிறது.புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகரான பா.ஜ., எம்.பி., பார்த்ருஹரி மகதப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவிப்பிரமாணத்தின் போது உதவி செய்யும் வகையில் டி.ஆர்.பாலு ,சுதீப் பந்தோபாத்தியாயா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இதனிடையே காங்., உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யவில்லை எனவும்கொடிக்குன்னில் சுரேஷ் புறக்கணிக்கப்பட்டது விதிமுறை மீறல் என இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்து உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பை நிராகரிப்பதாக தெரிவித்து உள்ளது.