ADDED : செப் 10, 2024 06:39 AM
கொப்பால்: திருட்டைத் தடுக்க வேண்டிய போலீஸ் ஏட்டு, பால் பாக்கெட்டுகளை திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொப்பால் நகரின், டெபுடி எஸ்.பி., அலுவலகத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றுபவர் சிவானந்த். இவர் பணிக்கு செல்லும் வழியில், கித்துார் ராணி சென்னம்மா சதுக்கம் பகுதியில் டெய்ரி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு காலை, இந்த வழியாக சிவானந்த் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பால் டெய்ரியில் யாரும் இல்லாததை கவனித்தார். டெய்ரி முன், பைக்கை நிறுத்திய அவர் சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு கிரேடில் இருந்த, அரை லிட்டர் பால் உள்ள, இரண்டு பாக்கெட்டுகளை திருடிக்கொண்டு சென்றுவிட்டார்.
டெய்ரி உரிமையாளர், எதேச்சையாக கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டபோது, ஒரு ஏட்டு, பால் பாக்கெட்டுகளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
'திருட்டைத் தடுக்க வேண்டிய போலீசே, திருடியது சரியல்ல' என, மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

