sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை

/

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை

15


ADDED : செப் 11, 2024 09:30 PM

Google News

ADDED : செப் 11, 2024 09:30 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 70 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு 2018ல் துவங்கியது. தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தி வரும் இந்த திட்டம் வாயிலாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இவலச சிகிச்சைகள் பெறலாம்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ,உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது,

* ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 70 வயது கடந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்து காப்பீடு வழங்கப்படும்.

* பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் கிராமங்களுக்கு 62,500 கி.மீ. தூர சாலைகள்.

* பி.எம். ‛‛இ'' டிரைவ் திட்டத்திற்கு 10ஆயிரத்து 900 கோடி ஒதுக்கீடு .

* மின்சார ஆம்புலன்ஸ்களுக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு.

* நீர்மின் திட்டங்களுக்கு 12,461 கோடி நிதி ஒதுக்கீடு. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us