பங்களாதேஷ். பஹ்ரைன் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி : மத்திய அரசு உத்தரவு
பங்களாதேஷ். பஹ்ரைன் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி : மத்திய அரசு உத்தரவு
UPDATED : ஏப் 28, 2024 09:31 PM
ADDED : ஏப் 28, 2024 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூடான், பஹ்ரைன், மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காய உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறையால் விலை உயர்வு அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து உள்நாட்டில் போது மான அளவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது.
தற்போது வெங்காயம் விலை குறைந்து காணப்படுவதை அடுத்து மேற்கண்ட நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

