ADDED : மார் 07, 2025 10:31 PM

புதுடில்லி:கொரோனா காலத்தில் உதவிக்கரம் நீட்டியது, சிறந்த தலைமைப்பண்பு உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு, பார்படாஸ் அரசு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான கயானாவில் கடந்த ஆண்டு நவம்பர் 20ல் நடந்த 'இந்தியா - கரிகாம்' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கரீபிய தீவு நாடான பார்படோசின் பிரதமர் மியா அமோர் மோட்லி, தங்கள் நாட்டு சார்பில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி, பார்படாஸ் நாட்டின் 'ஹானரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ்' என்ற உயரிய விருது, பிரதமர் மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. பார்படாசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த இந்த நிகழ்வில் அந்நாட்டின் அதிபர் டாம் சாண்ட்ரா மேசன் விருதை வழங்கினார். பிரதமர் மோடி சார்பில் நம் வெளியுறவு இணை அமைச்சர் பவித்ரா மார்கரிடா விருதை பெற்றுக் கொண்டார்.