பசவராஜ் பொம்மை மத்திய அமைச்சராவார் பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத் நம்பிக்கை
பசவராஜ் பொம்மை மத்திய அமைச்சராவார் பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத் நம்பிக்கை
ADDED : மே 06, 2024 03:41 AM

ஹாவேரி : ''பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றால், மத்திய அமைச்சராகும் யோகம் உள்ளது,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் முதல்வராக இருந்த கெங்கல் ஹனுமந்தையா, அதன் பின் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, ரயில்வே அமைச்சரானார். வீரப்ப மொய்லி, பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இது போன்று, முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றால், மத்திய அமைச்சராகும் யோகம் உள்ளது. பொறுமை, சகிப்பு தன்மை, மக்களை நேசிக்கும் குணம் உள்ளது. மாநில வளர்ச்சி குறித்து லோக்சபாவில் குரல் கொடுக்க வேண்டும்.
இவர் முதல்வராக இருந்த போது, ஆடு மேய்ப்போரின் நலனுக்காக, 300 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுத்தார். இதனால் 20,000 குடும்பங்கள் பயன் அடைந்திருக்கும். ஆனால் காங்கிரஸ் அரசு வந்த பின், திட்டம் நிறுத்தப்பட்டது.
குருபர் சமுதாயத்தின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்திய பெருமை, பா.ஜ.,வையே சாரும். காகிநெலே வளர்ச்சி ஆணையம் அமைத்தது, அன்றைய முதல்வர் எடியூரப்பா. தைரியம், விடா முயற்சி என, இரண்டும் இருந்ததால் மக்கள் தலைவராக இருக்கிறார்.
இவ்வாறு அவர்கூறினார்.