பீஹார் அரசியலில் நிதிஷ் வாரிசு: ஜேடியு செயல் தலைவர் கணிப்பு
பீஹார் அரசியலில் நிதிஷ் வாரிசு: ஜேடியு செயல் தலைவர் கணிப்பு
ADDED : டிச 06, 2025 04:15 PM

பாட்னா: பீஹார் அரசியலில் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் நுழையலாம் என்ற ஜேடியு செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா கூறி உள்ளார்.
அண்மையில் முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தேஜ கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். வலுவான பெரும்பான்மையுடன் அவர் ஆட்சி அமைத்த நாள் முதல், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் அரசியலில் இறங்குவார் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.
இந் நிலையில், நிதிஷ் மகன் நிஷாந்த் அரசியலில் நுழையலாம் என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகரும், செயல் தலைவருமான சஞ்சய்குமார் ஜா கூறி உள்ளார். பாட்னா விமான நிலையத்தில் ஒரு பக்கம் நிஷாந்த் நிருபர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அருகில் நின்று கொண்டு இருந்த சஞ்சய்குமார் ஜா கூறியதாவது;
கட்சியில் உள்ள உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் நிஷாந்த் குமார் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு இது நடக்க வேண்டும். ஆனால் எப்போது சேருவார் என்பதை அவர் (நிஷாந்த்குமார்) தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சஞ்சய்குமார் ஜா தெரிவித்தார்.

