ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 'பெஸ்காம்' இன்ஜினியர் கைது
ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 'பெஸ்காம்' இன்ஜினியர் கைது
ADDED : ஏப் 10, 2024 05:25 AM
ககலிபுரா : கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுக்க 3.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, 'பெஸ்காம்' இன்ஜினியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ககலிபுராவில் வசிப்பவர் சந்தன்குமார்; தொழிலதிபர். புதிதாக வணிக கட்டடம் கட்டி உள்ளார். அந்த கட்டடத்திற்கு மின் இணைப்பு கேட்டு, ககலிபுரா பெஸ்காம் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த இன்ஜினியர் யதீஷ் பலேகர், 37 என்பவர் மின் இணைப்பு கொடுக்க, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி சந்தன்குமாரிடம் கேட்டு உள்ளார்.
அதன் பின்னர் இருவரும் டீலிங் பேசி, லஞ்ச தொகையை 3.50 லட்சமாக குறைத்துஉள்ளனர்.
ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்குமாருக்கு விருப்பம் இல்லை. லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார்.
அவருக்கு சில அறிவுரைகள் கூறிய லோக் ஆயுக்தா போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
நேற்று முன்தினம் இரவு பெஸ்காம் அலுவலகம் அருகே உள்ள, இடத்தில் வைத்து யதீஷிடம், சந்தன்குமார் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், யதீஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.

