ADDED : ஜூன் 27, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோதி பாக்: 2021 பீகார் கலவர வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை மோதி பாக் பகுதியில் டில்லி போலீசார் கைது செய்தனர்.
பீகாரில் 2021ல் தரிபங்காவின் வாஜித்பூர் பகுதியில் ஒரு வன்முறை வெடித்தது. அப்போது ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகமது அப்தாப், 32, என்பவரை பீகார் போலீசார் தேடி வந்தனர்.
தலைமறைவான அவர், டில்லியில் பதுங்கியிருப்பதாக பீகார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தெற்கு டில்லியின் மோதி பாக் பகுதியில் டில்லி போலீசார் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் பீகார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.